Saturday, 29 April 2017
Sunday, 26 March 2017
Saturday, 25 March 2017
Thursday, 23 March 2017
ஆதார் அட்டை எதற்கெல்லாம் தேவை? எப்படி பெறலாம்?
ஆதார் அட்டை பெறுவது எப்படி?
1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை
மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும்
இருப்பிடச் சான்றை காண்பிக்கவும்.
3. ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை
ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச்
சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர்
உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
4. புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச்
சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை
கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய
தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
5. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர்
அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ்
ஏற்றுக்கொள்ளப்படும்.
6. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து
தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ்
ஏற்றுக்கொள்ளப்படும்.
7. பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன்
ஆகியவை எடுக்கப்படும்.
8. ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார்
எண் தான் வழங்கப்படும்.
9. நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார்
நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
10. ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.
11. ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை.
12. ஆதார் கடிதங்களை உரியவிரடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5
வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.
Tuesday, 7 March 2017
Monday, 6 March 2017
Monday, 27 February 2017
Monday, 30 January 2017
Wednesday, 18 January 2017
Tuesday, 17 January 2017
Monday, 16 January 2017
Thursday, 5 January 2017
Monday, 2 January 2017
Subscribe to:
Posts (Atom)